
அறம்
பொருள் இன்பம்
வகுத்தான்
வள்ளுவன்
பொருளும்
இன்பமும் கிழக்கே பயணித்திட
அறம்
மட்டும் 'ஏனோ' அறுபட்டு போனது
பொருள்
ஈட்ட அறம் துறக்கிறோம்
இன்பம்
காண அறமும் பொருளும் துறக்கிறோம்
துறவியரும்
துறக்க அஞ்சும்
அறத்தையும்
எளிதே துறக்கும் நாம்
மகா
துறவியரோ!!!
துறவியாக வாழ்ந்தது போதும் - அறத்தின்மீது
மோகம்
கொண்ட போகியாக வாழ்வோமாக!!!