தலைவன் என்பான் தனி உலகில் பிறப்பான்
நாம் அறம் கொல்லலாம்
அவன் அறம் கொள்ள வேண்டும்
நாம் பொய் உரைக்கலாம்
அவன் மெய் போற்ற வேண்டும்
பொருள் சேர்க்க இருள் புகலாம் நாம்
அவன் அவ்விருள் நீக்கி
நம் மருளும் துடைக்க வேண்டும்
நமக்கான தலைவனை உள்நோக்கி தேடாமல்
வான் நோக்கி வாழ்கிறோம்; அதுவும் சரிதான்
தலைவன் என்பான் தனி உலகில் பிறப்பான்.