அறம் எனப்படுவது அன்பொடு ஒழுகல்
ஆண்மை எனப்படுவது பெண்மை போற்றல்
இணிமை எனப்படுவது நன்மை
புரிதல்
ஈதல் எனப்படுவது கொடுத்ததும் மறத்தல்
உயர்வு எனப்படுவது ஒழுக்கத்தில் உயர்தல்
ஊக்கம் எனப்படுவது இடுக்கண் நகுதல்
எண்ணம் எனப்படுவது உண்மையில் தெளிவு
ஏதம் எனப்படுவது உயிர்க்கண் ஊறு
ஒப்புரவு எனப்படுவது கொடுத்துக் களித்தல்
ஓதல் எனப்படுவது அதன்படி நிற்றல்
ஒளவியம் எனப்படுவது அகத்ததை அழித்தல்