அணுக்கள் பல சேர்ந்து
பரிணாமங்கள் பல கடந்து
அண்டம் முதல்
பிரமாண்டம் பல நிகழ்த்தும் 'ஆறாம் அறிவு' வரை
அனைத்தும் 'தானாய்' நடந்தேறிட
இன்று நடந்திடும் நாடகம் மட்டும்
'நம்மின்' செயலோ?
என்னுள் சிந்தனையை கருவித்தவன் எவனோ
நான் அறியேன்
அது
பரம்பொருளோ டார்வின் உரைத்த பரிணாமமோ
நான் அறியேன்
ஆனால் அவனே என்னை ஆள்கிறான்
என் எண்ணமாக என் விருப்பமாக
என் அறிவாக என் நம்பிக்கையாக
அவனை
(என்னை) அறியாது விடமாட்டேன்
ஐய்யமில்லை எனக்கு
கேள்விகள் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே
பதிலும் வரும் எனும் பொறுமையுடன்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக