புதன், 29 மார்ச், 2017

அவனும் அவன் சமூகமும்

எந்த பெண்ணின் கூந்தலை கண்டும் பயப்படாமல் வளர்ந்து நிற்க்கும்
பூக்கள் போல
எந்த சமூகத்தை கண்டும் பயப்படாமல் வாழ நினைத்து,
யானை அங்குசம் கண்டு
மிரள்வது போல்
சமூகத்தின் அங்குசம் கண்டு
அவன் மிரண்டு,
தச்சன் கழித்த மரத்துகள் கொல்லனுக்கு பயன்படுவது போல்
 அவன் கழித்த கனவுகள்
யாருக்காயினும் பயன்படும்
என நினைத்து,
அடிமைகளோடு அடிமையாய்
உணர்ச்சிகள் அற்ற ஒரு பிரேதத்தை
கொண்டு மிகப் பிரமாதமாய் நடித்து கொண்டிருக்கிறான்.
அவன் சமூகமும் அப்படியே.
#1
எந்த பூனையும் எந்த தேசம் போனாலும் பூனையாகவே இருக்கிறது
அவன் மட்டும் அப்படி அல்ல,
அவன் சமூகமும் அப்படியே.
#2
தேங்கி கிடக்க வெட்கப்பட்டு ஆறுகள்
விரைவாக வற்றிவிட ஆசைப்படுகிறது.
சமூகத்தில் தேங்கி கிடக்க அவன்
ஒருபோதும் வெட்கம் கொள்ளவில்லை
அவனும் அப்படியே
அவன் சமூகமும் அப்படியே
#3
-தோழர் அஜீக் தமிழ்

சனி, 4 மார்ச், 2017

குறைவொன்றும் இல்லை















லட்சம் கடவுள் நாம் படைதோம்
அவரில் குறைவொன்றும் இல்லை
அவர் 'படைத்த' மனிதனிடம் தான் 
எத்தனை எத்தனை குறைகள்
மனம் மொழி மெய் என யாங்குமே
ஆயினும்
குறைவொன்றும் இல்லை
'மறைமூர்த்தி கண்ணா'
குறைவொன்றும் இல்லை!

வெள்ளி, 3 மார்ச், 2017

பாவம் கோட்ஷே

காந்தி ஆகலாம் என நினைத்தேன்
முடியவில்லை
சரி கோட்ஷே ஆகலாம் என்றால்
நாட்டில் காந்தியே இல்லை