செவ்வாய், 8 ஏப்ரல், 2014

முரண்படும் ஆசைகள் ஆயிரம்

ஆசைகள் ஆயிரம்!
ஆசைகள் இம்சைகள் ஆனா போதிலும்!!
ஆசைகள் ஆயிரம்!!!

சுற்றம் சூழ வாழ ஆசை 
யாரும் இல்லா தனி தேசம் செல்லவும் ஆசை

சிறகுகள் இன்றி பறந்திட ஆசை
சிற்பமாய் உறைந்திடவும் ஆசை

பில்கேட்ஸாய் உலகம் வாங்க ஆசை
பட்டினத்தார் போல் பாடித் திரிந்திடவும் ஆசை 

நாசா சென்று விஞ்ஞானி ஆக ஆசை
காசி சென்று மெய்ஞானி ஆகவும் ஆசை

கோபியர் கொஞ்சும் கண்ணனாக ஆசை
கம்பர் பாடும் ராமனாக வாழவும் ஆசை

தமிழ் மொழிக்காக பிற மொழியுடன் வாதிட ஆசை
பிற மொழிக்காக தமிழ் மொழியை விடச்செய்யவும் ஆசை

ஆயிரம் களிறு கொன்ற பரணியாக வீறுகொள்ள ஆசை
தரணி வென்ற புத்தனாக சாந்தம் கொள்ளவும் ஆசை

ஊன் சுவைத்து ஊன் வளர்க்க ஆசை
உயிர் மதித்து ஊன் துறக்கவும் ஆசை

ஆசைகள் அனைத்தும் அடைந்திட ஆசை
ஆசைகள் அனைத்தும் துறந்திடவும் ஆசை

சித்தன் முதல் பித்தன் வரை
ஆசையின் பரிணாமங்கள் தான் வேறாகிறது
அந்த வேர் என்றும் மண்ணிலே நிலைகிறது

6 கருத்துகள்:

  1. Man, this one is a master piece. Both content and language are superb.

    My best lines:

    ஆயிரம் களிறு கொன்ற பரணியாக வீறுகொள்ள ஆசை
    தரணி வென்ற புத்தனாக சாந்தம் கொள்ளவும் ஆசை

    ஊன் சுவைத்து ஊன் வளர்க்க ஆசை
    உயிர் மதித்து ஊன் துறக்கவும் ஆசை

    பதிலளிநீக்கு
  2. கருத்தில் இவ்வளவு முதிர்ச்சி!! எதிர்பார்க்கவில்லை தீபக்கிடம்! அழகான முரண் உன் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "சேர்கை"(with ppl like sangeee:)) காரணமாக இருக்கலாம்:)!!!!...

      நீக்கு
  3. Agree with every line except this!! /தமிழ் மொழிக்காக பிற மொழியுடன் வாதிட ஆசை
    பிற மொழிக்காக தமிழ் மொழியை விடச்செய்யவும் ஆசை/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sometimes the eager in achieving proficiency in knowledge thru/in other languages is masking the thirst for our "தமிழ்":)....மேலும் இந்த முரண்பாடுகள் எனக்கு சொந்தாமானது அன்று...சமூகத்தில் நாம் காண்பதும் அதன் மூலம் நம்மில் ஏற்பட்ட பிரதிபலிப்பும்!!!!!!:):)

      நீக்கு