தாமரை குளத்து நீர்பறவையது மனித வாழ்கை
இலையின் மீது திரியும் வாழ்கை
பறந்து செல்லலாம்
இறகின் உண்மை அறிந்தால்
நடந்து செல்லலாம்
மனதின் எடை
"இலை"
தாங்குமேன்றால்
மிதந்தும் பிழைக்கலாம்
எல்லாம்
இழந்தும் உயிர்ப்பற்று இருப்பின்
மூழ்கி
இறக்கத்தான் வேண்டும்
இறகு மறந்து இலை இழந்து
மனதும்
வற்றி விடின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக