பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்குப் புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்
கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்
-மனுஷ்ய புத்திரன்(இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக